Tuesday, June 23, 2015

காதல் கவிதை

உன்னை நினைத்து
கவிதை எழுதிவிட்டேன்
முகவரி தராததால்
தேங்கி கிடக்கறது ...!!!
நம் காதல்
ஒரு முக்கோணம்
வலி ,ஏக்கம் ,கனவு
பக்கங்களால்
அடைபட்டுள்ளது ....!!!
வானத்தின் நட்சத்திரம்
உன் நினைவுகள்
அடிக்கடி முகில்
மறைப்பது போல்
மறைந்து
கொண்டும் இருக்கிறது

காதல் கவிதை

இருவர் கைகளும் கோர்த்துக்கொண்டு
அவள் தோள்களில் நானும்
என் தோளில் அவளும் சாய்ந்தமர்ந்து,
கால்கள் வலிக்க நடைநடந்து
மனலில் வீடுகட்டி,
அலைகளில் ஓடி விளையாடி,
எனது காலத்தினைக் கலித்திட ஆசை...
வந்து வந்து உள்ளே போனாலும்
ஓயாமல் வந்து கொண்டிருக்கும்
அலைபோல‌ எங்கள் காதலும்
முடியாத‌ வரம் வேண்டும்

காதல் கவிதை

உன்னை
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍**********************
நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!

நீ என்னை நேசிக்க விட்டாலும் பரவாயில்லை

நீ
என்னை நேசிக்க
விட்டாலும் பரவாயில்லை
வேறு யாரையும் நேசித்து
விடாதே!
ஏனெனில் உன்னை
நேசித்து நான் படும்
அவஸ்தையை
நீயும் பட நேரிடும்

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!
***********************
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
***********************
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
***********************
இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம்
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
**********************
பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
**********************
அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
***********************
கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது

**********************

காதல் தோல்வி

அன்பே.! 
உன் மனக்குளத்தில் மீன்பிடிக்க 
தூண்டில் வீசிய போதெல்லாம் 
செருப்புதான் கிடைத்தது 

செருப்போடு உன் பாதமும் கிடைத்திருந்தால்.? 

அனலாய் கொதிக்கும் என்நெஞ்சில் 
என் கண்மணிகளை உருக்கி கொலுசாக மாட்டியிருப்பேன் 

என்றும் என் பயணம் உன்னோடுதான்...

காதல் தோல்வி

இணையாகாது உன் உறவாகாத- உன்
உறவுக்காய் காத்திருப்பது
காத்திருக்கிறேன்- நீ கிடைத்தால்
நான் கணவன்- நீ
கிடைக்கவில்லை எனின் நான் காதலன்