Tuesday, June 23, 2015

காதல் கவிதை

உன்னை
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍**********************
நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!

No comments:

Post a Comment