Tuesday, June 23, 2015

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!
***********************
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
***********************
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
***********************
இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம்
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
**********************
பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
**********************
அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
***********************
கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது

**********************

No comments:

Post a Comment